சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியத்தில், ஸ்டாலின் உள்ளிட்டோர் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டமும், ஆா்ப்பாட்டமும் திமுக நடத்தியது. 2018ம் ஆண்டு ஏப்.4ம் தேதி காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் கலந்து கொண்டன.
தோழமைக் கட்சிகள் கடந்த 2018 ஏப்ரல் 4ஆம் தேதி நடத்தின. சென்னை அண்ணா சாலையில் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் திருநாவுக்கரசா், மமக தலைவா் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனா்.
அனுமதியின்றி நடைபெற்றதாக போராட்டத் நடத்திய ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந் நிலையில் வழக்கு விசாரணையை எதிர்த்து திருநாவுக்கரசர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் விசாரணை அதிகாரியே வழக்கில் புகார்தார் என்பதால் வழக்கு விசாரணைக்கு, தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு , மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.