சென்னை: கோவை ஈஷா யோகா மையம் BSNL நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு பதிலாக ரூபாய் 40 ஆயிரம் செலுத்தினால் போதும் என்ற தீர்ப்பாயத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இந்த தீர்ப்பு வந்துள்ளது.
கோவை ஈஷா யோகா மையம் தொடர்பாக BSNL நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஈஷா மையம் ரூ.2.50 கோடி நிலுவை வைத்துள்ளது. இதுதொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 2 கோடியே 50 லட்சம் அபராதம் செலுத்த எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஈஷா தரப்பில் தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது. இதை விசாரித்த தீர்ப்பாயம், ரூ.40ஆயிரம் அபராதம் செலுத்தினால் போதும் என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, பிஎஸ்என்எல் நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பாயத்தின் ரூ.44,000 செலுத்தினால் போதும் என்ற உத்தரவை ரத்து செய்து, மீண்டும் விசாரித்து புதிய உத்தரவு பிறப்பிக்க தீர்பாயத்துக்கு உத்தரவிட்டுள்ளது