சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபுவின் மகள் கிரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அபிராமபுரத்தில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருபவர் நீதிபதி குமரேஷ் பாபு. இவரது மகள் கிரா. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் நேற்று இரவு திடீரென்று, தனத அறையில் கிரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கிரா அறையில் இருந்த வெகுநேரம் வெளியே வராததை அறிந்த குடும்பத்தினர் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது கிரா தூக்கில் தொங்கியதாக கூறப்படுகிறது. உடனே அவரை மீட்டு வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிரா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்<
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், கிராவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த அபிராமபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நீதிபதி குமரேஷ் பாபுவின் வீட்டில் தடயவியல் நிபுணர்கள், காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் குமரேஷ் பாபு. இவர் அதிமுக பொதுக்குழு வழக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.