சென்னை: தமிழ்நாட்டில்,  கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்களுக்கு பொருத்த மைக்ரோ சிப் கொள்முதல் செய்யும் டெண்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி நாடு முழு​வதும் உள்ள தெரு​நாய்​களுக்கு கருத்​தடை செய்​யப்​பட்​டு, அந்த நாய்​களுக்கு மைக்ரோ சிப் பொருத்​தும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்றன. அதன்​படி, தமிழகத்​தி​லும் தெரு​நாய்​களுக்கு கருத்​தடை செய்​து, அவற்​றுக்கு மைக்ரோ சிப் பொருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரு​கிறது. அதன்​படி, தமிழ்​நாடு கால்​நடைகள் அபி​விருத்தி முகமை மூல​மாக 2 லட்​சத்து 40 ஆயிரம் மைக்ரோ சிப்​களை கொள்​முதல் செய்ய திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இதற்​காக கடந்த செப்​டம்​பரில் முதல் டெண்​டர் விடப்​பட்டு அதில் எக்​ஸ்​ஹீலர் இன்​னோவேடிவ் சொல்​யூஷன்ஸ் என்ற தனி​யார் நிறு​வனம் தேர்வு செய்​யப்​பட்ட நிலை​யில்,  தமிழ்நாடு அரசு,  அந்த டெண்​டரை திடீரென ரத்து செய்து விட்டு கடந்த நவ.26-ம் தேதி மறு டெண்​டர் நடத்தி மற்​றொரு தனி​யார் நிறு​வனம் தேர்வு செய்​யப்​பட்​ட​தாக அறி​வி்க்​கப்​பட்​டது.

இதை எதிர்த்து எக்​ஸ்​ஹீலர் நிறு​வனம் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. அந்நிறுவனம் தாக்கல் செய்த மனுவில்,  “தமிழகம் முழு​வதும் கருத்​தடை செய்​யப்​பட்ட தெரு​நாய்​களுக்கு மைக்ரோ சிப்​களை விநி​யோகம் செய்​யும் டெண்​டரில் தங்​களது நிறு​வனம் தேர்வு செய்​யப்​பட்ட நிலை​யில், அதை திடீரென ரத்து செய்​து​விட்​டு, ஏற்​கெனவே தகு​தி​யிழப்பு செய்​யப்​பட்ட மற்​றொரு நிறு​வனத்​துக்கு மைக்ரோ சிப்​களை விநி​யோகம் செய்​வதற்​கான டெண்​டரை வழங்​கி​யிருப்​பது சட்​ட​விரோத​மானது. எனவே, அந்த டெண்​டர் நடை​முறை​களுக்கு தடை விதித்து அதை ரத்து செய்ய வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தது.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி என்​.சதீஷ்கு​மார், தெரு​நாய்​களுக்​கான மைக்ரோ சிப்​களை கொள்​முதல் செய்​வதற்​கான டெண்​டரில் பல்​வேறு குளறு​படிகள், விதி​மீறல்​கள் நடந்​துள்​ளது எனக் கூறி அந்த டெண்​டருக்கு இடைக்​காலத் தடை விதித்​தார். மேலும், இது தொடர்​பாக தமிழக அரசு தரப்​பில் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணையை டிச.18-ம் தேதிக்கு தள்ளி வைத்​துள்​ளார்​.

[youtube-feed feed=1]