சென்னை: பட்டியலினத்த மக்களை விமர்சித்து பேசியதாக திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. ஏற்கனவே நீதிபதிகள் பணி நியமனம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலின் மாட்டினார். தொடர்ந்து, அவ்வப்போது ஜாதி ரீதியிலாக ஏதாவது பேசி சிக்கலில் சிக்கி வருகிறார். சமீபத்தில், அம்பத்தூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.பாரதி பெண்களை இழிவு படுத்தி பேசியதாகவும் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் புகார் எழுந்தது. இந்த நிலையில், சிவகங்கையில் பட்டியலினத்தவர்களை சிறுமைப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி மீது மீண்டும் அதிமுக சார்பில் புகாரளிக்கப்பட்டது. புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி மீது புகார் பதியப்பட்டு வழக்கு தொடரப்ட்டது. இதற்கு தடை விதிக்கக்கோரி ஆர்.எஸ்.பாரதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார், ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு பிப்ரவரி 22 ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், அவரது மனு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.