கட்சத்தீவு விவகாரம் குறித்த மனுவை மனுவை உயர்நீதி மன்றம் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது.
இந்தியா – இலங்கை இடையே 1974ம் ஆண்டு கச்சதீவு குறித்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில் குறிப்பிட்டுள்ளபடி, கச்சத்தீவில் இந்திய மீனவர்களுக்கு பாரம்பரிய மீன் பிடி உரிமை பெற்று தர வேண்டும் என்று மீனவர் பாதுகாப்பு இயக்கத்தை சார்ந்த பீட்டர் ராயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “இந்த விஷயத்தில் மத்திய அரசு தான் முடிவெடுக்க முடியும். சென்னை உயர் நீதிமன்றத்தால் இலங்கை அரசுக்கு உத்தரவுகள் பிறபிக்க முடியாது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.