சென்னை: பிரபல சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது தமிழக அரசு போட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.

கொரோனா பரவல் தமிழக்ததில்  தீவிரமாக இருந்தபோது, அதற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறினார் சித்த மருத்துவர் தணிகாசலம் வீயோ வெளியிட்டார். இதையடுத்து, அவர்  சுகாதாரத்துறை அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் கொரோனா  குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்ததாக The Epidemic Diseases Act and Regu-lations section8-ன் படி அவர்மீது தமிழக சுகாதாரத்துறை மூலம் புகார் கூறப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் தணிகாசலத்தை கடந்த மே மாதம் 6 ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். அத்துடன் மக்களிடம் கொரோனா சிகிச்சை செய்வதாக பணம் பறித்ததாக கூறி அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.  இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தனது மகன் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து அவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுமீதான கடந்த விசாரணைகளின்போது, சென்னை உயர்நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. கொரோனாவிற்கு சித்த மருந்து தன்னிடம் இருக்கிறது என்று சொன்னாதாலேயே சித்தா மருத்து வர் திரு தணிக்காசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதா? என்றதுடன்,  சித்த மருத்துவர்களை அரசு சந்தேக பார்வையுடன் பார்ப்பது ஏன் என்ற வேதனை தெரிவித்ததுடன், அனைத்து மருத்துவமனைகளிலும் அலோபதி என்ற பெயரில் கபசுர குடிநீர் கொடுத்து சித்த மருத்துவ சிகிச்சை தான் அளிக்கப்படுகிறது. ஆனால்,  சித்த மருத்துவர்கள் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறினாலே சந்தேகத்துடன் பார்க்கிறது என்று வேதனை தெரிவித்தது.

இந்த நிலையில்,  சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், மற்ற மருத்துவ முறைகளை போன்று இந்திய மருத்துவ முறையையும் சமமாக ஊக்கவிக்க வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.