இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு உரிய ராயல்டி வழங்காமல் அவரது இசையை பயன்படுத்தி வந்த எக்கோ ரெக்கார்டிங் கம்பெனிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக இளையராஜா தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அப்போது இளையராஜாவின் இசையை தொடர்ந்து பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது.
எக்கோ ரெக்கார்டிங் கம்பெனி மீது இளையராஜா வழக்கு தொடர்ந்து பல ஆண்டுகள் ஆன நிலையில், அவரது இசையை அந்த நிறுவனம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தது.
Significant Court Victory for @ilaiyaraaja Division Bench of Madras High Court has stayed the operation of a decree which permitted Echo Recordings to continue exploit the sound recordings of the Maestro.
— Saravanan Annadurai (@saravofcl) February 18, 2022
இந்த நிலையில், இசைஞானியின் இசையை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்திருப்பது இளையராஜாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.