சென்னை: தமிழகத்தில் 2021ம் ஆண்டு நீதிமன்றங்களுக்கான விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ஆங்கில புத்தாண்டு – 2021-ம் ஜனவரி 1-ம் தேதி விடுமுறை.
பொங்கல் பண்டிகை – ஜனவரி 12 முதல் 15-ம் தேதி வரை விடுமுறை
குடியரசு தினம் ஜனவரி 26-ம் தேதி விடுமுறை
புனித வெள்ளி ஏப்ரல் 2-ம் தேதி விடுமுறை
ஏப்ரல் 13-ம் தேதி தெலுங்கு புத்தாண்டு விடுமுறை
ஏப்ரல் 12ந்தேதி முதல் 14-ம் தேதிவரை தமிழ் புத்தாண்டு விடுமுறை
மே 14-ம் தேதி ரம்ஜான் விடுமுறை
ஜூலை 21-ம் தேதி பக்ரீத் பண்டிகை விடுமுறை
ஆகஸ்டு 20-ம் தேதி மொகரம் விடுமுறை
ஆகஸ்டு 30-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை.
செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை
அக்டோபர் 14-ம் தேதி 15-ம் தேதி ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை
அக்டோபர் 19-ம் தேதி மிலாது நபி விடுமுறை
நவம்பர் 3 முதல் 5-ம் தேதி வரை தீபாவளி விடுமுறை.
இதுதவிர உழவர் திருநாள், மகாவீர் ஜெயந்தி, தொழிலாளர் தினம் (மே 1-ம் தேதி), சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, கிறிஸ்துமஸ் ஆகியவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன.
மே 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கோடை விடுமுறை
அக்டோபர் 9-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தசரா பண்டிகை விடுமுறை
டிசம்பர் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை
கீழமை நீதிமன்றங்களுக்கும் இந்த நாட்களில் விடுமுறை விடப்படுகிறது. அதேநேரம், ஜனவரி 23-ம் தேதி, மார்ச் 6-ம் தேதி, ஏப்ரல் 17-ம் தேதி, ஜூன் 5-ம் தேதி, ஜூலை 3-ம் தேதி, ஆகஸ்டு 7-ம் தேதி, செப்டம்பர் 4-ம் தேதி, அக்டோபர் 23-ம் தேதி, நவம்பர் 20-ம் தேதி, டிசம்பர் 4-ம் தேதி ஆகிய தேதிகளில் வரும் 10 சனிக்கிழமைகளில் அனைத்து கீழமை நீதிமன்றங்களும் செயல்படும்.
இதைதவிர அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், குடும்பநல நீதிமன்றங்கள் உள்பட அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை விடப்படுகின்றன.