சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்து வரும் 5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவி்ட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் எல்.சி. விக்டோரியா கவுரி, பி.பி. பாலாஜி, கே.கே.ராம கிருஷ்ணன், ஆர் கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகிய 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்திருந்தது.
இந்த பரிந்துரையை ஆய்வு செய்த மத்தியஅரசு, அவர்களை நிரந்தர நீதிபதிகளாக பதவி உயர்த்த அனுமதி வழங்கியது. இதையடுத்து, இந்த பரிந்துரை குடியரசுத்தலைவர் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இ ந்த பரிந்துரையை ஏற்று 5 பேரையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவி்ட்டுள்ளார். மேலும் அகமதாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சமீம் அகமதுவை சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் மாற்றி உத்தரவிட்டு உள்ர்.
இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.