சென்னை:

மிழகத்தில் சென்னை உள்பட  11 மாவட்டங்களில் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்றி ஏப்ரல் 1-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது,  ஊரக பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 58,172 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள 799 கம்பங்களை அப்புறப்படுத்த ஊரக வளர்ச்சித் துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும்,  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து ஆகியவற்றிலும் கொடிக்கம்பங்களை அகற்றியது குறித்து 21 மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளதாக, தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, மீதமுள்ள 11 மாவட்டங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றி, ஏப்ரல் 1-ம் தேதி அறிக்கை அளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்தனர்.