சென்னை:

றைந்த அதிமுக எம்எல்ஏ  ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்ககி உள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் ஜெ. உடல்நலமின்றி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது திருப்பரங்குன்றம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஏ.கே.போஸ் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஜெயலலிதா வைத்த கைரேகை தொடர்பாக புகார் எழுப்பப்பட்டது.

இதுகுறித்து, திருப்பபரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது   ஜெயலலிதா அனுமதி இல்லாமல் பெறப்பட்ட கையெழுத்து என்று கூறியிருந்தார். இது தொடர்பான வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் மருத்துவர் பாலாஜி அளித்தது செல்லாது என்று கூறிய நீதிபதி வேல்முருகன்,  திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏகே போஸ் பெற்றது  வெற்றி செல்லாது என்று  அதிரடியாக அறிவித்தார்.

அத்துடன்   தன்னை வெற்றிபெற்றதாக அறிவிக்கக்கோரிய திமுக வேட்பாளர் சரவணனின் மனுவை  தள்ளுபடி செய்தார்.

திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ் கடந்த ஆண்டு காலமானது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக திருப்பரங்குன்றத்துக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.