மும்பை: கொல்கத்தா அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிவரும் சென்னை அணி, சிறப்பாக ஆடிவருகிறது.
துவக்க வீரர் ருதுராஜ், இத்தொடரில் முதல் அரைசதம் அடித்து, 4 போட்டிகளில், முதன்முறையாக சிறப்பாக ஆடினார். அவர், 42 பந்துகளில் 64 ரன்களை விளாசி அவுட்டானார். அவருடன் ஆடிவரும் டூ பிளசிஸ் 34 பந்துகளில் 48 ரன்கள் அடித்து களத்தில் உள்ளார்.
தற்போது, மொயின் அலி களத்திற்கு வந்துள்ளார். இவர் கடந்தப் போட்டியில் சிறப்பாக ஆடியவர். சென்னை அணிக்கு, இன்னும் கைவசம் அதிக விக்கெட்டுகள் இருக்கும் நிலையில், ரன் விகிதம் குறையாமல் சென்றால், 200 ரன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.