சென்னை:
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை நர்ஸ் ஜோன் மேரி பிரிசில்லா    குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படுவதாகவும் அறிவித்து உள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியராக பணியாற்றி வந்த பிரிசில்லா, உடல் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் கொரோனாவால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரும், மருத்துவமனை தரப்பில், அவர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், உயிரிழந்ததாக வும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில்,  பணியின்போது உயிரிழந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய செவிலியர் சேவையை அங்கீகரிக்கும் விதமாக, அவருடைய குடும்பத்திற்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் வழங்க உத்தரவிட்டுளேன் என்று தெரிவித்துள்ளார்.