கோவா: சென்னை கால்பந்து அணியின்(Chennaiyin FC) அதிகாரி ஒருவர், கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக, கோவா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சென்னை கால்பந்து அணியின் அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞராகவும், சமூகவலைதள நிர்வாகியாகவும் இருப்பவர் பூஷான் பகாடியா.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நடந்த மைதானத்தின் விஐபி நுழைவு வாயிலில், அவரிடம் சோதனை நடத்தியபோது, அவரிடம் 24 கிராம்கள் அளவில் கஞ்சா கைப்பற்றப்பட்டதால், அவர் கைதுசெய்யப்பட்டதாக கோவாவின் ஃபடோர்டா காவல் நிலைய பொறுப்பாளர் கபில் நாயக் தெரிவித்தார்.
பூஷான் பகாடியா மீது போதை மருந்துகள் மற்றும் சைக்கோடிரோபிக் வஸ்துகள்(NDPS) சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், சனிக்கிழமை இரவு அவருக்கு பெயில் வழங்கப்பட்டது.