சென்னை:

‘‘நிரந்தர பிராட் பேண்ட் வேகம் உள்ள நகரங்கள் பட்டியலில் சென்னை 32.67 மெஹா பைட் பெர் செக்கண்ட் (எம்பிபிஎஸ்) என்ற அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது. இது நாட்டின் சராசரி வேகத்தை விட 57.7 சதவீதம், அதாவது 20.72 எம்பிபிஎஸ் அதிகம்’’ என்று பிராட் பேண்ட் வேக பரிசோதகர் ஊக்லா தெரிவித்துள்ளது.

இது குறித்து ஊக்லா வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், ‘‘நாட்டில் உள்ள சராசரி வேகத்தை விட தென் மாநிலங்களில் பிராட் பேண்ட் வேகம் சிறந்த முறையில் உள்ளது. சென்னையை அடுத்து டில்லி, பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டிணம் ஆகிய நகரங்கள் நாட்டின் சராசரி அளவை விட அதிக வேகம் பெறுகின்றன.

டவுன்போடு வேகத்தில் 28.45 எம்பிபிஎஸ் வேகத்துடன் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. இங்கு பிப்ரவரி மாதத்தில் இதர மாநிலங்களை விட 37.4 சதவீதம் வேகமாக இருந்தது. தமிழ்நாடு 27.94 எம்பிபிஎஸ் வேகத்துடன் 2ம் இடத்தில் உள்ளது. மிசோராமில் 3.62 எம்பிபிஎஸ் என்ற குறைவான வேகத்துடன் இருந்தது. இது நாட்டின் சராசரி வேகத்தை விட 82.5 சதவீத குறைவு’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘‘மாநிலங்களின் சராசரி வேகத்தில் கர்நாடகா 27.2 எம்பிபிஎஸ் என்ற நிலையில் முதலிடத்தில் உள்ளது. டில்லி 18.16 என்ற வேகத்துடன் 5ம் இடத்தில் உள்ளது. 4 மெட்ரோ நகரங்களில் மும்பை கடைசி இடத்தில் உள்ளது. ஒட்மொத்தமான பட்டியலில் மும்பை 8ம் இடத்தில் உள்ளது. பிராட் பேண்ட் வேகம் அதிகமாக உள்ள முதல் 5 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் தென்மாநிலங்கள் 4 இடங்களை பிடித்துள்ளது. வடக்கு மாநிலங்கள் முதல் 10 இடங்களில் 4 இடங்களை பிடித்துள்ளது.

பிப்ரவரி மாதத்தின் அடிப்படையில் நிரந்தர பிராட் பேண்ட் டவுன்லோடு வேகத்தில் உலகளவில் 20.72 எம்பிபிஎஸ் சராசரி வேகம் என்ற அடிப்படையில் இந்தியா 67வது இடத்தில் உள்ளது. 65வது இடத்தில் இரு ந்த இந்தியா ஜனவரி முதல் 67வது இடத்தை பிடித்துள்ளது. பாட்னா தான் நாட்டிலேயே சராசரி வேகத்தில் 62.4 சதவீதம் என்ற குறைவான நிலையில் உள்ளது. பாட்னாவை தொடர்ந்து கான்பூர், லக்னோ, புனே, நாக்பூர் மற்றும் இதர நகரங்களில் வேகம் குறைவாக உள்ளது’’ என்று அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.