சென்னை:
சென்னையில் மின்சார ரயில்கள் நாளை முதல் 100 சதவீதம் இயங்கும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை முன்னிட்டு, சென்னையில் அத்தியவசிய பணிகளுக்கு மக்கள் செல்வதற்கு ஏதுவாக கொரோனா கட்டுப்பாடுகளுடன் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்து இருந்தது.

தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்த உள்ளதால், நாளை முதல் 100 சதவீதம் இயங்கும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று பரவல் குறைந்த உள்ளதால், சென்னையில் மின்சார ரயில்கள் நாளை முதல் 100 சதவீதம் இயங்கும். வார நாட்களில் 658 மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.