சென்னை: சென்னையில் இருந்து இன்று காலை துபாய் செல்லவிருந்த இன்டிகோ ஏர் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் புறப்படுவது தாமதமானது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல இருந்த இண்டிகோ விமானம் பயணிகளுடன் தயாராக இருந்தது. இந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் துபாய் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தள்ளார். இதனால், உடனே புறப்படுவது நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். இதையடுத்து விமானம் முழுவதும் முழுமையாக சோதனையிடும் பணி நடைபெற்று வருகிறது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இதையடுத்து விமானத்தில் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது உறுதியானது .
இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இன்று காலை 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணையில் காவல்துறையினர் இறங்கினர். அதில், மதுபோதையில் ஆசாமி ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிரட்டிய நபரின் உறவினர்கள் துபாய் செல்ல இருந்த நிலையில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த ஆசாமியை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.