சென்னை: 2021 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் அதிமுக தலைமை, சென்னை மாநகர மாவட்டச் செயலாளர்களை மாற்றி புதிய செயலாளர்களை நியமித்து உள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமைக்கழகம் சார்பில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அதிமுக கழக நிர்வாக வசதியை கருத்தில்கொண்டும், கழகப்பணிகளை விரைவுபடுத்தும் வகையிலும் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் வடசென்னைதெற்கு, தென்சென்னை வடக்கு தென்சென்னை தெற்கு ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கான மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வடசென்னை தெற்கு (கிழக்கு) (ராயபுரம், திருவிக நகர் சட்டமன்ற தொகுதிகள்) அமைச்சர் D.ஜெயக்குமார்.
வடசென்னை தெற்கு (மேற்கு) (எழும்பூர், துறைமுகம் சட்டமன்ற தொகுதிகள்) நா.பாலகங்கா.
தென் சென்னை வடக்கு (கிழக்கு) ( சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதிகள்) – ஆதிராஜாராம்.
தென்சென்னை வடக்கு (மேற்கு) (தியாகராயநகர், அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிகள்) தி.நகர் சத்யா.
தென்சென்னை தெற்கு (கிழக்கு) (மைலாப்பூர், வேளச்சேரி சட்டமன்ற தொகுதிகள்) எம்.கே.அசோக்.
தென்சென்னை தெற்கு (மேற்கு) (விருகம்பாக்கம், சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிகள்) விருகை V.N.ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.