சென்னை:
கொரோனா ஊரடங்கு காரணமாக போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், வெளிநாட்டு தபால் மூலம் ரூ .3 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தப்பட்டுகண்டுபிடிக்கப்பட்டுஉள்ளது. இது தொடர்பாக ஈரோட்டைச் சேர்ந்த நபர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் அல்லோலப்பட்டுக்கொண்டிருக்கையில், போதைப் பொருட்கள் கடத்தலும், மதுபான விற்பனைகளும் மற்றொருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், சென்னைக்கு வெளிநாட்டு தபால் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்டது, சென்னை விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
பிராங்க்ஃபர்ட்டில் இருந்து வந்த சந்தேகத்திற்கிடமான அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, அதனுள் ரூ .3 லட்சம் மதிப்புள்ள 100 போதை மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. அதனை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள கோரமங்கல பகுதியில் அமேசானில் பணிபுரியும் ஈரோடு பகுதியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை லேனா மண்டபம் அருகே சந்தேகத்திற்கிடமான காரில் இருந்து 19 அட்டைப் பெட்டியில் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரை பறிமுதல் செய்ததோடு பிடிபட்ட இரண்டு பேரையும் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.