சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடப்பாண்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் சேர்ந்துள்ளனர் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, கல்வி உதவித்தொகை என பல்வேறு சலுகைகள் தமிழகஅரசு அறிவித்து உள்ளது. மேலும், கல்வி கட்டணம் எதுவும் இல்லாதது மட்டுமின்றி பாடப்புத்தகம், நோட்டு-புத்தகம், சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மாணவ-மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது.  இதன் காரணமாக, பெற்றோர்களை தங்களது குழந்தை களை சேர்க்க அரசு பள்ளிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் மாணாக்கர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

மாநில தலைவர் சென்னையில், மாநகராட்சி சார்பில் மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அரசு பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.  தற்போதுவரை மாநகராட்சி தரப்பில், 281 பள்ளிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மாநகராட்சி பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் தொடங்கியது முதல் இதுவரை,  1 லட்சத்து 5 ஆயிரம் பேர் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்து இருப்பதாக கல்வித் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று, பொதுமுடக்கம் போன்றவைகளால் பெற்றோர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் சென்னை அரசு பள்ளிகளில் மட்டும்,  1 லட்சத்து 11 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்தனர். மாநிலம் முழுவதும் சுமார் 8 பேர் சேர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் தற்போதுவரை 1.5 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். செப்டம்பர் மாதம் விஜயதசமி வரை மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என மாநகராட்சி அறிவித்து உள்ளது. இதனால், மேலும் மாணாக்கர்கள் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.