சென்னை: சென்னை மண்டலங்களில் மொத்தம் 23581 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. 3 மாதங்கள் கடந்தும் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அதிகாரிகள்  திணறி வருகின்றனர்.
குறிப்பாக சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 13 மண்டலங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மண்டலத்தில் ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது.
இந் நிலையில், கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2586 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 4 ஆயிரத்து 282 பேர் குணமடைந்துள்ள நிலையில், 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
அண்ணாநகர் மண்டலத்தில் 2 ஆயிரத்து 431 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 ஆயிரத்து 578 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆக உள்ளது. ராயபுரத்தில் தற்போது 2 ஆயிரத்து 297 பேர் சிகிச்சையில் உள்ளனர். இங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 162 ஆகவும், பலி எண்ணிக்கை 150 ஆகவும் உள்ளது.
தேனாம்பேட்டை மண்டலத்தை பொறுத்தவரை 2 ஆயிரத்து 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 ஆயிரத்து 966 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 151 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். தண்டையார்பேட்டையில் தற்போது ஆயிரத்து 984 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 ஆயிரத்து 66 பேர் குணமடைந்துள்ள நிலையில், 143 பேர் உயிரிழந்துள்ளனர்.