சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, சென்னையில் மட்டும் இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை 1.48 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த  12,838 வார்டுகளுக்னா பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க பிப்ரவரி மாதம்  19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினர்களின் பதவியேற்பும், மேயர் பதவிக்கான தேர்தலும் மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தேர்தலையொட்டி,  வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவச அன்பளிப்புகள் மற்றும் முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படைகளை அமைத்து கண்காணித்து வருகின்றன.  பல இடங்களில்  தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைகளின் போது முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம், பொருட்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி, சென்னையில் இதுவரை 1.48 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.