சென்னை

சென்னை மாநகராட்சி மெரினா நீச்சல் குளம் 20 நாட்களுக்கு இயங்காது என அறிவித்துள்ளது/

நேற்று சென்னை மாநகராட்சி,

“மெரினா நீச்சல் குளத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு மையம் தங்குதடையின்றி இயக்க ஏதுவாக குழாய் அமைத்தல், ஊறு குழிகள் பொருத்துதல், சோதனை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே, வெள்ளிக்கிழமை முதல் 31-ந்தேதி வரையில் மெரினா நீச்சல் குளம் 20 நாட்கள் இயங்காது.”

என அறிவித்துள்ளது,