சென்னை: சென்னை  மாநகராட்சி தேர்தலில்  72வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட பிரபல பாடகர் ‘கானா’ பாலா  என்ற பால முருகன் தோல்வி அடைந்தார். இந்த வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

வடசென்னை  புகழ் கானா பாலாவுக்கு தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக சென்னையில் ரசிகர் பட்டாளமே உள்ளது. இதன் காரணமாக, அவர் மாநகராட்சி தேர்தலில்  சுயேச்சையாக களம்புகுந்தார். தான் வசிக்கும் பதியான  திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதி 72வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டார் கானா பாலா என்கிற பாலமுருகன்.

வேட்புமனு தாக்கல் செய்தபோது,  நான் பிறந்து வளர்ந்த இந்த மக்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு அறிந்தவன். அதனால் மக்கள் எனக்கு ஆதரவளிப்பார்கள் .   நான் ஏற்கனவே இதே பகுதியில் போட்டியிட்டு 4 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றிருக்கிறேன்.  இந்த முறை நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அவர் தோல்வி அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. முதல் சுற்றில் 3534 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தவர், இறுதியில் திமுக வேட்பாளர் சரவணனிடம் தோல்வி அடைந்தார்.  கானா பாலா 6,095 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்,