சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும், குறைந்துள்ளதாகவும், தமிழகஅரசு தெரிவித்து வந்தாலும், தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுவதுபோல, தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது என்பது உண்மையே.
இதற்கு எடுத்துக்காட்டாக , சென்னையில் தொற்று பரவல் அதிகரித்து வருவதை உறுதி செய்யும் வகையிலேன வரைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க அனைவரும் முக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் பிப்ரவரி 24ந்தேதி அன்று மாலை 6 மணி நிலவரப்படி, புதியதாக 463 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8,49,166 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 4,062 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் சிகிச்சை பலனின்றி 6 பேர் மரணம் அடைந்துள் ளனர். இதனால் கொரோனா உயிரிழப்பு 12,478 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில், இதுவரை 8,33,089 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு தலைநகர் சென்னையிலேயே காணப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மக்கள் நெருக்கம் என்பதே. சென்னையில் நேற்று மட்டும் 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் மட்டும் கொரோனாவுல் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,34,652 ஆக உள்ளது. அதுபோல, தமிழக்ததில் 4062 பேர் சிகிச்சை பெற்றுவதில், 1,700 பேர் சென்னை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.