சென்னை
அகில இந்திய அளவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையில் சென்னை முதல் இடத்தில் உள்ளதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் 1130 பெருகு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 88,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்1475 பேர் உயிர் இழந்துள்ளனர். தற்போது 14952 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ஒரு பேட்டியில் “அடிக்கடி வெளியே சென்று வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும். ஒருமுறை வெளியே செல்லும் போது 10 நாட்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும்.
அகில இந்திய அளவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையில் சென்னை மாநகரம் முதல் இடத்தில் உள்ளது. தினசரி இங்கு சுமார் 15000 சோதனைகள் வரை நடைபெற்று வருகிறது.
கொரோனா பாதிப்பைத் தவிர்க்க இன்னும் 3 மாதங்களுக்காவது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.
பிற மாவட்டங்களில் இருந்து சென்னை வர 4,92,149 பேர் இ பாஸ் கோரி விண்ணப்பித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்