சென்னை :

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் உயர்ந்து வருகிறது.

இதனை கவனத்தில் கொண்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஜூன் 19 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் யாரும் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவுக்கு மேல் செல்லக்கூடாது, வாகனங்கள் பயன்படுத்த கூடாது என்று தமிழக அரசு வழங்கி இருக்கும் அறிவுறுத்தலை நடைமுறைப்படுத்த, சென்னையில் வரும் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பொதுமக்கள் வாகனங்கள் பயன்படுத்த தடை விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால், கடந்த சில நாட்களாக சென்னையின் பக்கத்து மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டிற்கு ‘ஜே…ஜே….’வென சென்று வந்த மக்கள், முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரமாக இருக்கும் என்பதால் அடுத்த 12 நாட்கள் என்ன செய்வது என்று புரியாமல் ஆடிப்போயுள்ளனர்.