ரடங்கு காரணமாக சுமார் 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை மாநகர பேருந்துகள் கடந்த சில நாட்களாக இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 234 பேருந்துகள் உள்ளன.
இவற்றில் தற்போது 2 ஆயிரத்து 300 பேருந்துகள் மட்டும் முழுநேரமும் இயக்கப்படுகின்றன.
ஆனால் எதிர்பார்த்த வருமானம் இல்லை.

முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள், ஒரு நடையில் ( ட்ரிப்) 5 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டும்.

ஆனால் ஊரடங்கு காலத்துக்கு பிறகு இயக்கப்படும் இந்த பேருந்துகள் ஒரு நடையில் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டுகிறது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் முன்னர் நாள் ஒன்றுக்கு 3 கோடி ரூபாய் ’கலெக்‌ஷன்’’ ஆனது.

இப்போது ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவாகவே வசூல் ஆகிறது.

’’இந்த பணம் எரிபொருள் செலவுக்கு கூட போதுமானதாக இல்லை’’ என போக்குவரத்து கழக அதிகாரிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

-பா.பாரதி.