சென்னை நகர ஆட்டோக்களின் பர்மிட் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA) எல்லைவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் இனி சென்னை பர்மிட் பெற்ற ஆட்டோக்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரக்கோணம், ராணிப்பேட்டை வரை இயக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோக்களின் எல்லையை நீடித்து தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஆணையர் உத்தரவிட்டிருப்பதை அடுத்து எல்லை தாண்டியதாக இனி அபராதம் விதிக்கப்படாது என்று கூறப்படுகிறது.