சென்னை
தெற்கு ரயில்வே வரும் 1 ஆம் தேதி சென்னை சென்டிரல் – மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
”அரக்கோணம் பகுதியில் பராமரிப்பு பணி நடக்க உள்ளதால், தெற்கு ரயில்வே சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்துள்ளது.
அதன்படி, மைசூரு-எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரயில் (12610) வருகிற 1 ஆம் தேதி காட்பாடி-எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் (12607) வருகிற 1 ஆம் தேதி எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
அதாவது இந்த ரயில் காட்பாடியில் இருந்து மைசூருவுக்கு இயக்கப்படும்.”
என்று கூறப்பட்டுள்ளது.