சென்னை: பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள  பிராட்வே பேருந்து நிலையம்  மேம்படுத்தும் பணி  நாளை மறுதினம் (ஜனவரி  – 7ந்தேதி) தொடங்க உள்ளதால், அன்று முதல் பேருந்துகள்  தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  தற்காலிகமாக ராயபுரம் மற்றும் தீவுத்திடல் பகுதிகளில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

 அதிக மக்கள் அடர்த்தி கொண்ட, போக்குவரத்து வசதிகளை மையமாகக் கொண்ட   பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது. இதை மேம்பபடுத்த  566.6 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம், நாடு முழுவதும் செயல்பாடுகளைக் கொண்டுள்ள பிரிட்ஜ் அண்ட் ரூஃப் கம்பெனி (இந்தியா) லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு பல்முனைப் போக்குவரத்து வசதி வளாகம் (MMFC) உருவாக்கப்படும் மற்றும் புகழ்பெற்ற குறளகம் கட்டிடம் முழு அளவில் புனரமைக்கப்படும்.

இதன் ஒரு பகுதியாக, பேருந்து முனையத்தின் கட்டுமானப் பணிகள் 24 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வணிகக் கோபுரங்கள் மற்றும் குறளகம் கட்டிடத்தின் பணிகள் 30 மாதங்களுக்குள் நிறைவடையும்.

இந்தத் திட்டமானது, பெருநகர சென்னை மாநகராட்சியின் (GCC) சார்பில், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான சென்னை மெட்ரோ அசெட் மேனேஜ்மென்ட் லிமிடெட் (CMAML) மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்தில்,  பாதசாரிகள் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், உட்புற நடைபாதைகள், பொதுவான குளிரூட்டப்பட்ட இணைப்புப் பகுதி, 433 கார்கள் மற்றும் 1,174 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில், அடுக்குத் தள வாகன நிறுத்துமிட வசதிகள், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள்  உள்பட,  இந்த வளாகம் முழுவதும் மொத்தம் 30 மின்தூக்கிகள் மற்றும் 27 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளது.

இந்த  நவீனப்படுத்தும் மறுசீரமைப்பு பணிகள் வரும் ஜனவரி 7-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.  இதையொட்டி, அங்கிருந்து இயக்கப்பட்டு வந்த அனைத்து மாநகரப் பேருந்துகளும் தற்காலிகமாக ராயபுரம் மற்றும் தீவுத்திடல் முனையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்கான புதிய வழித்தட அட்டவணை மற்றும் தற்காலிக பேருந்து நிறுத்த விவரங்களை மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

பிராட்வே பேருந்து முனையத்தை நவீனப்படுத்தும் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளைச் சென்னை மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது. இதன் காரணமாக, ஜனவரி 7 (07.01.2026) முதல் பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, அங்கிருந்து இயங்கும் பேருந்துகள் ராயபுரம் மற்றும் தீவுத்திடல் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முனையங்களிலிருந்து இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

ராயபுரம் தற்காலிக முனையத்திலிருந்து இயங்கும் பேருந்துகள்:

ராயபுரம் முனையத்திலிருந்து கீழ்க்கண்ட முக்கிய வழித்தடங்கள் மற்றும் அண்ணாசாலை, ஈ.வே.ரா சாலை வழியாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்:

காமராஜர் சாலை வழி: 6, 13, 60E, 102, 109, 102C, 102K, 102P, 102S, 102X, 109A, 109X, 21G, 21L, 21E ET.

அண்ணாசாலை வழி: 11, 21, 26, 52, 54, 60, 10E, 11G, 11M, 155A, 17E, 17K, 188C, 188ET, 18A, 18B, 18D, 18E, 18K, 18P, 18R, 18RX, 18X, 21C, 26B, 26G, 26K, 26M, 26R, 51D, 51J, 52B, 52G, 52K, 54G, 54L, 5C, 60A, 60D, 60G, 60H, 88C, 88K, 88K ET, 9M ET, A51, D51 ET, E18, E51, M51R.

ஈ.வே.ரா சாலை வழி: 50, 101CT, 101X, 53E, 53P.

நிறுத்தங்கள்: இந்த பேருந்துகள் ராயபுரம் செல்லும் போது, வடக்கு கோட்டை சாலையில் உள்ள துறைமுகம் எம்.எல்.ஏ அலுவலகம் அருகே நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும். காமராஜர் சாலை பேருந்துகள் பாரிஸ் கார்னர் மற்றும் எஸ்பிளானேட் சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.

தீவுத்திடல் தற்காலிக முனையத்திலிருந்து இயங்கும் பேருந்துகள்:

பீச் ஸ்டேஷன், மண்ணடி மற்றும் வேப்பேரி வழியாகச் செல்லும் பேருந்துகள் தீவுத்திடல் முனையத்தைப் பயன்படுத்தும்:

பீச் ஸ்டேஷன் வழி: 1, 4, 44, 330, 33L, 38A, 38G, 38H, 44C, 44CT, 4M, 56D, 56J, 56K, 56P, 57D, 57F, 57H, 57J, 57M, 8B, C56C, 557A ET.

மண்ணடி வழி: 33B, 56C, 56F.

ஈ.வே.ரா சாலை & வேப்பேரி வழி: 15, 20, 15F, 15G, 17D, 20A, 20D, 50ET, 50M, 71D, 71E, 71H, 71V, 120, 120CT, 120F, 120G, 120K, 150, 35, 42, 242, 142B, 142P, 35C, 42B, 42D, 42M, 640, 64K, 7E, 7H, 7K, 7M.

நிறுத்தங்கள்: தீவுத்திடல் நோக்கிச் செல்லும் பேருந்துகள் கோட்டை நிலையம் (Fort Station), டி.என்.பி.எஸ்.சி (TNPSC) சாலை நிறுத்தம் மற்றும் முத்துசாமி மேம்பாலம் வழியாக இயக்கப்படும்.

தீவுத்திடலில் இருந்து புறப்படும் போது, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் என்.எஸ்.சி போஸ் சாலை சந்திப்பு நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லும்.

பணிகள் முடியும்வரை இந்த தற்காலிக மாற்றம் நடைமுறையில் இருக்கும் என்பதால், பயணிகள் தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படு கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]