சென்னை-பெங்களூரு விரைவுச் சாலையின் தமிழகப் பகுதி ஆகஸ்ட் 2025க்குள் முடிக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
மக்களவையின் குளிர்கால கூட்டத்தொடரில் கேள்விகளுக்கு பதிலளித்த கட்காரி, தமிழகத்தில் ரூ.7,525 கோடி செலவில் 105.70 கிமீ நீளம் கொண்ட 261.70 கிமீ நீளமுள்ள விரைவுச் சாலைத் திட்டம் பல்வேறு கட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையை (NH-48) இணைக்கும் வகையில் இருங்காட்டுக்கோட்டையில் புதிய வடிவிலான மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இந்த விரைவுச் சாலை ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குடிபாலாவில் முடிவடைகிறது.
குடிப்பாலா முதல் வாலாஜாபேட்டை வரையிலான 24 கிமீ நீளம், வாலாஜாபேட்டையில் இருந்து அரக்கோணம் வரையிலான 24.5 கிமீ நீளம் (86 சதவீதம்), அரக்கோணம் முதல் காஞ்சிபுரம் வரையிலான 25.5 கிமீ நீளம் (52 சதவீதம்) மற்றும் காஞ்சிபுரம் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான 32.1 கிமீ நீளம் (65 சதவீதம்) என என்ஹெச்ஏஐ (NHAI)-யால் நான்கு தொகுப்புகளாக நடைபெறும் வரும் இந்த திட்டப் பணியில் கிட்டத்தட்ட 72 சதவீத பணிகள் முடிந்துள்ளது.
குடிபாலா (ஏபி) முதல் வாலாஜாபேட்டை, வாலாஜாபேட்டை முதல் அரக்கோணம் மற்றும் அரக்கோணம் முதல் காஞ்சிபுரம் வரையிலான பாதைகள் மார்ச் 2025 க்குள் முடிவடையும், காஞ்சிபுரம் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான பாதை ஜூலை 2025 க்குள் முடிக்கப்படும்.
இருப்பினும், இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பால பணிகள் இந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட நிலையில் 15 சதவீத பணிகள் மட்டுமே இதுவரை முடிவடைந்துள்ளது இது அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என்றும் அதன்பின் இந்த விரைவுச் சாலை பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.