சென்னை

ன்று முதல் 23 ஆம் தேதி வரை சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுகின்றன.

 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள  செய்திக் குறிப்பில்,

”சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் இன்று (20-ந்தேதி) முதல் 23-ந்தேதி வரையில் மதியம் 1.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை (3 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில மின்சார ரயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுகின்றன..

சென்னை கடற்கரையில் இருந்து இன்று (20-ந்தேதி) முதல் 23-ந்தேதி வரை காலை 11.40, மதியம் 12.20, 12.40, 1.45, 2.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டில் இருந்து இன்று (20-ந்தேதி) முதல் 23-ந்தேதி வரை மதியம் 1.45, 2.20 மாலை 3.05, 4.05, 4.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-சிங்கப்பெருமாள்கோவில் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் இன்று (20-ந்தேதி) முதல் 23-ந்தேதி வரையில் இரவு 10.30 மணி முதல் அதிகாலை 1.30 மணி வரை (3 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருக்கிறது.

இதனால் சென்னை கடற்கரையில் இருந்து இன்று (20-ந்தேதி) முதல் 23-ந்தேதி வரை இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலும், செங்கல்பட்டில் இருந்து இதே தேதியில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் செங்கல்பட்டு-சிங்கப்பெருமாள்கோவில் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.”

என அறிவிக்கப்பட்டுள்ளது.