சென்னை:  நாட்டின் பெரிய விமானமான, ஏர்பஸ் 380 ரக விமானங்கள், சென்னை வந்துசெல்லும் வகையில், சென்னை விமான நிலைய ஓடுபாதையின் நீளம் அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம், சென்னை விமான நிலையம்  உலக தரத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர்பஸ் 380 ரக விமானங்கள் தரையிறங்கும் வகையில், சென்னை விமான நிலையத்தில் உள்ள முதல் ஓடுபாதையின் நீளம் மேலும்  400 மீட்டா் அதிகரிக்கப்படுகிறது. இதனால் ஓடுபாதையின் நீளம் 4.058 கிலோ மீட்டராக உயர்கிறது.

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஏர் பஸ் ஏ-380. இது பிரான்ஸ் நாட்டின் ஏர் பஸ் நிறுவன தயாரிப்பாகும். இந்த ஏர் பஸ் விமானத்தில் ஒரே நேரத்தில் சுமா ராக 600 முதல் 800  பயணிகள் பயணிக்க முடியும். மொத்தம் நான்கு என்ஜின்கள் செயல்படுகின்றன. அதில் இரண்டு என்ஜின்கள் மட்டுமே விமானம் தரையிறங்கும் பொழுது செயல்பாட்டில் இருக்கும். ‘போயிங்’ ரக விமானங்களுக்கு போட்டியாக தயாரிக்கப்பட்டதே ‘ஏர் பஸ் 380’ ரக விமானங்கள். 580 டன்கள் எடை கொண்ட ஏர் பஸ் விமானம், அதிகபட்சமாக 40 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. ‘சூப்பர் ஜம்போ’ ரக விமானங்கள் என்றழைக்கப்படும் இவற்றை எல்லா ஓடுபாதைகளிலும் தரையிறக்க முடியாது.

அதற்காக வடிவமைக்கப்பட்ட விமான ஓடுதளங்களில் மட்டுமே தரையிறக்க முடியும். டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் மட்டுமே இந்த வகை விமானங்களை தரைஇறக்குவதற்கான ஓடுதளங்கள் உள்ளன. தற்போது சென்னை விமான நிலையத்திலும் ஏர்பஸ் த380 விமானம் தரையிறங்கும் வகையில் ஓடுதளத்தின் நீளம் அதிகரிக்கப்படுகிறது.

சென்னை சர்வதேச விமான நிலையம், உள்நாட்டு விமான நிலையம் தற்போது 1,350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. விமானங்களின் எண்ணிக்கை, பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே உள்நாடு, சா்வதேச விமான முணையங்களை இணைத்து, ஒருங்கிணைந்த நவீன விமான முனையம் ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணி நடந்து வருகிறது. சென்னை விமான நிலைய மேம்பாட்டுக்காக, கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு, பல்லாவரம் மற்றும் பரங்கி மலை பகுதியில், 21.24 ஏக்கர் நிலம், விமான நிலைய ஆணையத்திடம் வழங்கப்பட்டது. அதில் 10.20 ஏக்கா் நிலத்தை பயன்படுத்தி, சென்னை விமானநிலைய ஓடுபாதைகளை அபிவிருத்தி செய்யப்படவிருக்கிறது.

Airbus A380 விமானங்கள் தயாரிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், Qatar Airways, Ethihad airways, Emirates airways நிறுவனங்கள் Airbus A380 விமானங்களை உபயோகப்படுத்தி வருகிறதுழ. அதிகபட்சமாக  எமிரேட்ஸ் நிறுவனதினம் அதிகஅளவிலான ஏர்பஸ் விமானங்கள் உள்ளன. இந்த விமானத்தில், சொகுசு அறைகள், பார்கள், உணவகங்கள், கெசினோக்கள் என பல வசதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.