இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 10 வருடங்களுக்கு முன்பு வெற்றி பெற்ற சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை தான் தற்போது மீண்டும் அதே கூட்டணியில் இயக்கி நேற்று முதல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
படத்தின் கதையை பொறுத்தவரை முதல் பாகத்தில் வெட்டியாக கிரிக்கெட் ஆடிக் கொண்டு ஊர் சுற்றும் இவர்கள் இரண்டாம் பாகத்தில் காதல் கல்யாணம் என ஆகியவுடன் நண்பர்களை பிரிந்து கிரிக்கெட் ஆட முடியாமல் மனைவிக்கு தெரியாமல் நண்பர்களை பார்க்கின்றார்கள்.
இவர்களில் சிலர் வேலைக்காக வெளிநாட்டுக்கும் மும்பைக்கும் சென்றுவிட மீதி உள்ளவர்கள் ஜெய்யின் காதல் கல்யாணத்துக்காக ஊருக்கு செல்கின்றார்கள். அங்கு கள்ளு குடிக்க செல்பவர்கள் அவர்களின் நண்பன் அரவிந்தை பார்க்கின்றார்கள். இவர் ஒரு பெண்ணை கூட்டிக்கொண்டு ஒடிவிட்டாராம் அதுவும் இவர்களின் டீமின் 1.30 லட்சத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாராம்.
அரவிந்தை பார்க்கும்போது படத்தின் வில்லனான வைபவ்விடம் அடி வாங்கிக் கொண்டுள்ளதை பார்த்து அவரை காப்பாற்றுகின்றார்கள்.
அதன்பின் அரவிந்துக்கும் வைபவுக்கும் கிரிக்கெட்டில் பிரச்சனை என்பது தெரியவருகின்றது. அதன் பின் அரவிந்துடன் சேர்ந்து அவர்களை தோற்கடிக்க விளையாடுகின்றார்கள் அந்த ஆட்டத்தை பார்த்த வைபவ் குறுக்கு வழியில் ஜெயிக்க சொப்பன சுந்தரியுடன் ஜெய் ரூமில் படுத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை எடுத்து வைத்துக் கொண்டு அடுத்த ஆட்டத்தில் தோற்றால் இந்த படங்களை அழித்து விடுகின்றேன் என்று கூற வேண்டுமென்றே அந்த ஆட்டத்தில் தோல்வியடைகின்றார்கள்.
அதன் பின்னும் அந்த புகைப்படத்தை வைபவின் நண்பர் வெளியிட்டுவிடுகின்றார் அதனால் ஜெய்யின் கல்யாணம் நின்றுவிடுகின்றது. அதன் பின் ஜெய்யின் கல்யாணம் நடந்ததா வைபவின் டீமை இவர்கள் தோற்கடித்தார்களா என்பதுதான் மீதி கதை…
படத்தின் ஃபிளஸ் :-
இவர்களை இவர்களே கலாய்த்துக்கொள்வது தான்.
சிவாவின் சரவெடி காமெடி அதுவும் யூடிபில் விமர்சகராக அவதார் படத்தை வியட்நாம் காலனி திரைப்படத்தின் காப்பி என்று கூறும் போது திரையரங்கமே அதிருது.
வில்லனாக வரும் வைபவ் இந்த படத்துக்கு அப்புறம் எங்கேயோ போய்டுவாரு…
பிரேம்ஜீ வழக்கம் போல தான் ஒரு பந்தையும் பிடிக்கல.
படத்தில் வரும் நாயகிகள் அனைவரும் ரசிக்கும் வண்ணம்..
யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்துக்கு மேலும் வலு சேர்கின்றது..
படத்தில் மைனஸ் :-
மைனஸ் படத்தின் கேமரா மேன் தான் நிறைய அவுட்டாப் போகஸ்..
தேவையில்லாமல் சில இடங்கலில் கதையை சொதப்பியது தான்..
மொத்ததில் இத்திரைப்படம் டெஸ்ட் கிரிகெட் போல நீண்டுயிருந்தாலும் பார்க்க 20/20 போல ரசிக்க வைக்கின்றது….