சென்னை: செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசிடம் குத்தகைக்கு வழங்குங்கள் என  பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்

தமிழகத்தில் கோரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழகத்திற்கு குத்தகைக்கு வழங்க வேண்டும்.

தமிழக அரசுக்கு கொரோனா தடுப்பூசி உற்பத்தி மையம் குத்தகைக்கு வழங்கினால் உடனடியாக உற்பத்தி தொடங்கப்படும். தடுப்பூசி போடும் பணிகளும் விரைவுபடுத்தப்படும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.