செங்கல்பட்டு: சென்னையின் நுழைவு வாயில் செங்கல்பட்டு  என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்,   ஒவ்வொரு தனி மனிதருக்கும் நன்மை செய்வதுதான் திமுக அரசு என்று கூறினார்.

செங்கல்பட்டில் ரூ.1285 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பொதுமக்களுக்கு உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,

செங்கல்பட்டு சென்னையின் நுழைவு வாயிலாக திகழ்கிறது  என கூறிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் கலை பெருமை சொல்லும் மாமல்லபுரம் அமைந்துள்ள மாவட்டம் செங்கல்பட்டு என்று கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டம் தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்க திமுக ஆட்சியில் பல்வேறு நிறுவனங்கள் அமைத்துள்ளன. மகிந்திரா, விப்ரோ, பிஎம்டபிள்யூ, பாக்ஸ்கான், சாம்சங், இன்போசிஸ் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

திருப்போரூரில் 500 ஏக்கரில் உப்பு உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பெருமாள்கோவில் அருகே இயந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இயற்கை வளம், கலைப்பெருமை, தொழிற்வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது செங்கல்பட்டு.

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு விளங்குகிறது. தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது செங்கல்பட்டு மாவட்டம்.

தமிழ்நாட்டில் தொழில்துறையில் பெண்கள் அதிக அளவில் பணியாற்றுகிறார்கள். 1929-ல் செங்கல்பட்டு மாவட்டத்தில்தான் சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு நடைபெற்றது.

பெண்களுக்கு சொத்துரிமை என்ற பெரியார் தீர்மானத்தை சட்டமாக்கியவர் கலைஞர். 1989ல் கலைஞர் ஆட்சிகாலத்தில் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. எல்லா துறைகளிலும் பெண்கள் கோலோச்சும் காலம் இது.

அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் 3,28,000 மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம்.

மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை, விடியல் பயண வசதி, பு

துமைப் பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 3.08 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு தனி மனிதருக்கும் பார்த்து பார்த்து நன்மை செய்யக்கூடிய அரசுதான் திராவிட மாடல் அரசு.

கோரிக்கை மனுக்களை அரசே மக்களின் இருப்பிடத்துக்கு சென்று வாங்க உருவாக்கியதுதான் மக்களுடன் முதல்வர். ம

க்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 52,083 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

முதல்வரின் முகவரி மூலம் 2.76 லட்சம் கடிதங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் ரூ.97 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

மாமல்லபுரத்தில் ரூ.74 கோடி புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.”

இவ்வாறு தெரிவித்தார்.