
தமிழ், தெலுங்கு, கன்னடம் என கோடி கட்டி பார்ப்பவர் ஷில்பா ஷெட்டி.
ஷில்பா ஷெட்டி மற்றும் அவரின் கணவர் ராஜ்குந்த்ரா மீது வெளிநாடுவாழ் இந்திய தொழிலதிபர் சச்சின் ஜோஷி என்பவர் புகார் அளித்துள்ளார், சத்யுக் என்ற தனியார் நிறுவனத்தில் கடந்த 2014 மார்ச்சில் தங்க சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தார் எனவும் இதில் 18 லட்சம் வரை செலுத்திய அவருக்கு தள்ளுபடி விலையில் 5 ஆண்டுகள் கழித்து தங்கம் வழங்கப்படும் என்று கூறியிருந்தனர். ஆனால் தற்போது அப்படி ஒரு நிறுவனமே இல்லை என சச்சின் ஜோஷி, அதன் இயக்குநர்களாக இருந்த ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது புகார் அளித்துள்ளார்.
அதன்படி இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த புகாரை ராஜ்குந்த்ரா மறுத்துள்ளார்.
ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ்குந்த்ரா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான, இக்பால் மிர்சியுடன் தொழில்ரீதியான நட்பு வைத்திருந்ததாகப் ஏற்கனவே புகார் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]