சன்டிகார்:

ழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவத்து வரும் அரியானா மாநில முன்னாள் முதல் மந்திரி 84 வயதான  ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு 21 நாள் பரோல் வழங்கி உள்ளது நீதி மன்றம்.

அரியானா மாநிலத்தில் 1999-200ஆம் ஆண்டு முதல்வராக இருந்தபோது,  ஆசிரியர் நியமனம் தொடர்பான ஊழல  வழக்கில் அவர்மீதான குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விசாரணை கோர்ட்டு கடந்த 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அரியானா மாநிலத்தில் நடைபெற உள்ள  இடைத்தேர்தலுக்காக பரோல் கேட்டு ஓம்பிரகாஷ் சவுதாலா கடந்த மாதம் சிறைத்துறையிடம் அனுமதி கோரியிருந்தார். அப்போது அவருக்கு நிபந்தனையுடன் பரோல் கொடுக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அவரது பரோலை டில்லிஅரசு ரத்து செய்து உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து சவுதாலா தரப்பில், டில்லி உயர்நீதி மன்றத்தில் முறையிட்டது. அப்போது, டில்லி அரசு நிபந்தனைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து திகார் ஜெயில் நிர்வாகம் ஓம்பிரகாஷ் சவுதாலாவை நேற்று பரோலில் விடுத்தது. அவருக்கு 21 நாள் பரோல் வழங்கப்பட்டது.

இவர்கடந்த 2017ம் ஆண்டு  தனது 82வது வயதில் 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.