அமைச்சர் போனது ஜாலி டூர்.. பேட்டி கேட்டப்ப அடிச்சாரு பாருங்க பல்டி..
கொரோனா பூதம் கவ்வி சென்று விடும் என்ற பயத்தில் ஒவ்வொருவரும், தங்களைத் தனிமைப் படுத்திக்கொண்டு வீட்டில் மறைந்திருக்கிறார்கள்..
இந்த நிலையில் சத்தீஷ்கர் மாநில கலால் துறை அமைச்சர் கவாசி லக்மா, இரு தினங்களுக்கு முன்பு, தலைநகர் ராய்ப்பூரில் இருந்து ராய்கர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
போலீஸ் பரிவாரங்களை உள்ளடக்கிய ’கான்வாய்’’ உடன் சென்றதால் அமைச்சரை யாரும் கேள்வி கேட்கவில்லை.
ராய்ப்பூரில் இருந்து ராய்கர் சுமார் 250 கி.மீ.தூரம்.
ராய்கரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் லக்மா,’’ஊரடங்கால் வீட்டிலேயே உட்கார்ந்து ரொம்பவும் போரடித்து விட்டது. அதனால் சும்மா இங்கே (ராய்கர்)வந்துள்ளேன்’’ என்று இயல்பாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் லக்மாவின் பேட்டி வீடியோவாக வெளிவந்து, அவருக்குப் பெருத்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
’’ லாக்டவுன்’ விதிகளை அமைச்சர் மீறி விட்டார்.’’ என்று எதிர்க்கட்சிகள் கண்டனக்குரல் எழுப்பின.
திரும்பவும் இன்னொரு பேட்டி அளித்து, சமாளித்துள்ளார், லக்மா.
இந்த முறை அவர் சொன்னது, இது:
’’ராய்கரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. எனவே தான், அங்கு திடீர் ‘விசிட்’ அடித்தேன்’’ என்று சமாளித்துள்ளார்.
– ஏழுமலை வெங்கடேசன்