சட்டிஸ்கரில் உள்ள சுர்குஜா மாவட்டம், லுந்திரா தாலுகாவில் உள்ள செர்முண்டா கிராமத்தைச் சேர்ந்தவர், மழைவாழ் விவசாயி ஜெய்ராம்.
கடந்த பிப்ரவரியில் வரலாறு காணாத கடுமையான மழையின் காரணமாக பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயம் பாதித்தது. அவர் ஒரு லட்ச ரூபாய் பயிர் நஸ்டம் என நஷ்ட ஈடு கோரி இருந்தார். ஆனால் அவருக்கு தாசில்தார் வெறும் ரூபாய் 81 க்கு காசோலை அனுப்பியுள்ளார். இதுகுறித்து ஜெய்ராம், தாசில்தாரிடம் விவரம் கேட்டப் போது, நீ எவ்வளவு நிவாரணம் கோரி இருந்தாயோ அவ்வளவு அளிக்கப்பட்டுவிட்டதாக கூறிவிட்டார்.
நான் 1.2 லட்சம் வங்கியில் இருந்து கடன் வாங்கி நான்கு ஏக்கர் நிலத்தில் வெங்காயம், பயிர், கடுகு பயிரிட்டேன். அதில் ரூபாய் ஒரு லட்சம் நஷடம் ஆகிவிட்டது. இப்போது இந்த ரூபாய் 81 வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய ? கடனை அடைக்கவா அல்லது தற்கொலை செய்துக்கொள்ளவா ? என வேதனையுடம் வினவுகின்றார் ஜெய்ராம்.
லூந்த்ரா தாசில்தார் இர்ஷாட், எல்லா சட்டதிட்டங்களும் பின்பற்றித்தான் நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. இதில் மறுபரிசீலனைச் செய்வதற்கு ஒன்றும் மில்லை எனக் கூறியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், சட்டிஸ்கரில், அரசுக் கணக்கின் படி 309க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகின்றோம்.