ராய்ப்பூர்

த்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி ஆவர். இவர் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவார். இவர் கடந்த 2013 ஆம் வருடம் நடந்த சத்தீஸ்கர் மாநில  சட்டப்பேரவை தேர்ஹ்டலில் மரவாகி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் பாஜகவின் பெண் வேட்பாளரான சமீரா பைக்ரா என்பவர் இவரை எதிர்த்துப் போட்டியிட்டார்.

அமித் ஜோகி

அமித் ஜோகி தனது வேட்பாளர் மனுவில் அளித்த பிரமாண பத்திரத்தில் பொய்யான தகவல்கள் அளித்துள்ளதாக சமீரா பைக்ரா புகார் அளித்தார். அந்த புகாரில் அமித் ஜோகி தனது பிறந்த இடம், சாதி குறித்து தவறான தகவல்கள் அளித்துள்ளதாக சமீரா தெரிவித்தார்.

அஜித் ஜோகி

அமித் ஜோகி தாம் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சர்பகாராவில் பிறந்ததாகத் தெரிவித்திருந்தது தவறு எனவும் அவர் அமிஎரிக்காவில் பிறந்தவர் எனவும் குறிப்பிட்டிருந்த சமீரா அவர் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவர் அல்ல எனவும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த புகார் குறித்த விசாரணையையொட்டி அவர் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. இவ்வாறு குற்றச்சாட்டு பதியப்பட்டு ஆறு மதங்கள் ஆகியும் அமித் ஜோகி கைது செய்யப்படாததையொட்டி நேற்று  சமீரா பிலாஸ்பூர் காவல்துறை சூப்பிரண்ட் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினார். அதையொட்டி அமித் ஜோகியை இன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்னாள் சத்தீஸ்கர் முதல்வரும் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ்  அமைப்பாளருமான அஜித் ஜோகி மீது ஏற்கனவே தம்மைப் பழங்குடியினர் எனப் போலி சான்றிதம் அளித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.