ராய்ப்பூர்
சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் நடைபெற உள்ள முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்துள்ளது.
வரும் 7 மற்றும் 17 ஆம் தேதிகளில் 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் இரு கட்டங்களாகச் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் முதல்கட்டமாக 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அங்குப் பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதைப் போல் வடகிழக்கு மாநிலமான மிசோரத்திலும் நவம்பர் 7-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
மிசோரம் முதல்வர் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பிரசாரத்தில் பங்கேற்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். எனவே பிரதமர் மோடி மிசோரத்துக்கு நேரடியாகச் செல்லாமல் விடியோ மட்டும் வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இரு மாநிலங்களிலும் இன்று மாலையுடன் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்துள்ளது.