சென்னை:
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போக்சோவில் கைதான பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சென்னையில் உள்ள புகழ்பெற்ற பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் மாணவிகளுக்கு வணிகவியல் ஆசிரியர் ராஜகோபால் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்குப் படித்த முன்னாள் மாணவிகள் பலர் இணையத்தில் புகார்களை அடுக்கினர்.
ஆசிரியர் ராஜகோபாலன், பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் , மாணவர்களுக்கு ஆபாச படங்களின் இணையதள பக்கங்கள் மற்றும் இணைய வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் அவர்கள் தங்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபல் போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எழும்பூர் மகிளா நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் வீட்டில் ராஜகோபால் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை நடத்திய நீதிபதி ஜூன் 8ஆம் தேதிவரை புழல் சிறையில் ராஜகோபாலை அடைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போக்சோவில் கைதான பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.