சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்பட 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிமீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.. இந்த வழக்கில் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றப்பத்திரிகை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து வழக்கு நேற்று (ஜுன் 09) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜி, அசோக்குமார் உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகினர். செந்தில்பாலாஜிக்கு ஏற்கனவே குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 12 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வழக்கின் விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.