டில்லி

டுக்கும் வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் உள்ள ஓரத்தில் உள்ள கீழ் படுக்கையில் மாற்றம் செய்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  குறிப்பாகப் பலரும் இரவு நேரப் பயணத்தை விரும்புவதால் படுக்கும் வசதி கொண்ட பெட்டிகளில் அதிகம் பேர் முன்பதிவு செய்கின்றனர்.   இதில் ஆர் ஏ சி நிலையில் உள்ளோருக்கு சைட் லோயர் பெர்த் என்னும் ஓரத்தில் உள்ள கீழ் படுக்கை இருக்கைகள் அளிக்கப்படுகின்றன.  இதில் படுக்கையை இரண்டாகப் பிரித்து மடித்து இருவர் அமரவேண்டி வரும்.

கூட்டம் குறைவாக இருக்கும் போது இந்த இருக்கை படுக்கை வசதியாக அளிக்கப்படுகிறது.  அப்போது இரு இருக்கைகளையும் மடிப்பை பிரித்து படுக்கை ஆக்கலாம். ஆனால் இந்த இரு இருக்கைகளும் ஒன்றாகச் சேராமல் நடுவில் லேசான இடைவெளியுடன் இருக்கும்.  இதனால் பயணிகளுக்கு இது ஒரு பிரச்சினையாக இருந்து வந்தது.

இப்போது இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.   சைட் லோயர் பெர்த் படுக்கையாக்கிய பிறகு அதற்கு மேல் மற்றொரு படுக்கை போன்ற ஒன்றைப்  பொருத்த முடியும் என்பதால் இடைவெளி இருக்காது.  இது குறித்த வீடியோவை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்,தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.  இந்த புதிய வசதிக்கு மக்கள் மிகவும் வரவேற்பு அளித்துள்ளனர்.

நமது வாசகர்களுக்காக அந்த வீடியோ :

[youtube https://www.youtube.com/watch?v=BWV2v-8kMaE]