
ஜெய்பீம் படத்தில் ஒரு காட்சியில் குரு என்ற பெயரில் காவல் உதவியாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளவரின் பின்னால் வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்றிருக்கும்.
இதற்கு வன்னியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. உண்மையில் நடந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், கொலை செய்ததாக தண்டிக்கப்பட்டவர் தலித் கிறித்தவர் என்றும் குறிப்பிட்டிருந்தது.
உண்மைக்கு மாறாக வன்னியர் சமுகத்தைச் இழிவுப்பத்துவது போல் சித்தரிப்பதாகவும், எனவே குரு என்ற பெயரையும். நாள்காட்டியில் வன்னியர் சங்கம் என வரும் காட்சியையும் நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் சம்மந்தப்பட்ட காட்சியின் நாட்காட்டியில் இடம்பெற்றிருந்த வன்னியர் சங்கம் என்ற பெயருக்கு பதிலாக இந்து கடவுளின் உருவபடத்தை மாற்றி படக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
[youtube-feed feed=1]