சென்னை

ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் அரிசி விநியோகத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப் படுகிறது.   அதில் பச்சரிசி 10 கிலோவும், புழுங்கலரிசி 10 கிலோவும் வழங்கப்பட்டு வருகின்றன.   இது தவிர சர்க்கரை,  கோதுமை, மண்ணெண்ணெய் ஆகிய பொருட்கள்  மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.   அதில் மண்ணெண்ணெய் இரு எரிவாயு சிலிண்டர் உள்ளவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை

தமிழக அரசு இனி கார்டுகளுக்கு 70% புழுங்கல் அரிசியும் 30% பச்சரிசியும் வழங்க உத்தரவிட்டுள்ளது.   இந்திய உணவுக் கழகத்தில் இருந்து 70:30 என்னும் விகிதத்தில் ரேஷனுக்கு அரிசி வழங்கப்படுவதால் அதே விகிதத்தில் கார்டுகளுக்கு வழங்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இனிமேல் கார்டுகளுக்கு 14 கிலோ புழுங்கல் அரிசியும் 6 கிலோ பச்சரிசியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

 

[youtube-feed feed=1]