தரமான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரிக்கும் தயாரிப்பாளர் “2 MB” ரகுநாதன் P.S தற்போது தொடர் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் “வந்தான் சுட்டான் ரிப்பிட்டு” எனும் புதிய படத்தை தயாரிக்கிறார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

காமெடி கலந்த திகில் படமாக உருவாகும் “வந்தான் சுட்டான் ரிப்பிட்டு” படத்தில் சந்திரமௌலி நாயகனாக நடிக்கின்றார். மீனாக்ஷி கோவிந்தராஜன், ரெபா மோனிகா நாயகிகளாக நடிக்கின்றனர். மனோ பாலா, ஊர்வசி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

செவிலோ ராஜா ஒளிப்பதிவை மேற்கொள்ள, சந்தோஷ் தயாநிதி மற்றும் K.C.பாலசாரங்கன் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.
கலை – கிருஷ்ணா
படத்தொகுப்பு – K.J.வெங்கட்ரமணன்
காஸ்ட்யூம் டிசைனர் – சோபியா ஜெனிபர்
மேக்கப் – ராஜா
சண்டைப்பயிற்சி – விக்கி
புரொடக்ஷன் எக்ஸிகியுடிவ் – சேகர்
எக்ஸிகியுடிவ் புரொடுயுசர் – G.பிரதீப் குமார், சன் செந்தில்
ஸ்டில்ஸ் – சக்தி
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
Patrikai.com official YouTube Channel